‘நெஞ்சே எழு'.... இது மரியான் படத்தில் வரும் ஒரு பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த பாடலில் 38 செகண்ட் டீஸர் தற்போது யுடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
பரத்பாலா இயக்கத்தில் நெஞ்சே எழு .... பாடலின் 38 செகண்ட் டீஸரை யு டியூப்பில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் கண்டு ரசித்து லைக் கொடுத்திருக்கிறார்களாம்.
இசையோடு, நெஞ்சே எழு பாடல் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படமாக்கப் பட்டுள்ளதாம். இதனாலேயே ரசிகர்களிடையே பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர். நெஞ்சே எழு பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.
மரியான் படத்தின் இசை பல்வேறு சாதனைகளை படைக்கும் என்கின்றனர் சோனி நிறுவனத்தார்.
மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு' டீஸர் - வீடியோ
Post a Comment