இந்தியில் 'கப்பார்' ஆக வரும் முருகதாஸின் ரமணா!

|

Ramana Becomes Gabbar Bollywood

தமிழில் விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற ஏ ஆர் முருகதாஸின் ரமணா படம் இப்போது இந்தியில் தயாராகிக் கொண்டுள்ளது.

படத்துக்கு கப்பார் என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றிருப்பவர் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ஆனால் படத்தை அவர் இயக்கவில்லை. ஆரம்பத்தில் முருகதாஸைத்தான் இயக்குமாறு கேட்டிருந்தார்.

ஆனால் முருகதாஸ் மறுத்துவிட்டதால், அந்தப் பொறுப்பை இயக்குநர் க்ரிஷ்-ஷிடம் ஒப்படைத்துள்ளார். தெலுங்கில் கம்யம், வேதம் படங்களை இயக்கியவர் க்ரிஷ்.

இதே அக்ஷய் குமாரை வைத்து துப்பாக்கியை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment