இந்த ஆண்டிற்கானவிஜய் அவார்ட்ஸ் விழாவில் குறும்பட விருதும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. சிறந்த குறும்பட இயக்குநர்களுக்கு சிறப்பு விருதும் திரைப்படம் இயக்க வாய்ப்பும் வழங்க உள்ளது விஜய் டிவி.
விஜய் டிவி ஆண்டு தோறும் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழா ஏழாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது விஜய் அவர்ட்ஸ். இதற்கான அறிமுக விழா கடந்தவாரம் நடைபெற்றது.
இந்த ஆண்டு மே 11ம் தேதி சென்னையில் விழா நடைபெறுகிறது. தமிழ்த் திரைஉலகின் நட்சத்திரங்களும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்த விழாவினை இதுவரை சிறப்பித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் புதிதாக குறும்பட விருதும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. ஒரு குறும்படத்தை 15 நிமிடங்களுக்கு மிகாமல் இயக்கி அதனை டி.வி.டியாக விஜய் டிவிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் குறும்படங்களில் சிறந்த படத்தை தேர்வு செய்து அதற்கு சிறந்த குறும்பட விருதை விஜய் டிவி வழங்குகிறது.
குறும்படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள்இயக்குனர்கள் கவுதம்மேனன், கற்றது தமிழ் ராம், ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். சிறந்த குறும்பட இயக்குனருக்கு விஜய் டி.வி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
Post a Comment