லண்டன்: தான் 46 வயதிலும் இளமையாக காணப்பட சர்க்கரை வியாதி தான் காரணம் என்று ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி 46 வயதில் கர்ப்பமாக உள்ளார். அவர் இந்த வயதிலும் இளமையாக இருப்பதற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறேன். ஏனென்றால் 19 வயதில் இருந்தே எனக்கு சக்கரை வியாதி உள்ளது. இதை வியாதியாக நினைக்காமல் வரமாக நினைக்க கற்றுக் கொண்டேன். இந்த வியாதி இருப்பதாலேயே நான் சத்தான உணவு உண்ணுவதுடன், தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருப்பதால் தான் என்னால் 46 வயதிலும் கர்ப்பமடைய முடிந்துள்ளது.
அழகு என்பது காலப்போக்கில் குறைந்து மறைந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே என்றார்.
உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் அடிக்கடி ஹாலி பெர்ரியின் பெயரும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment