சென்னை: ஹீரோயிசம் உள்ள கதைகளில் இனி நயன்தாரா நடிக்க மாட்டாராம்.
நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்களாக உள்ளனவாம். படத்தில் நயன்தாராவை வயதான நடிகையாக கருதி பிளாஷ்பேக் காட்சி இல்லை என்றால் ஏதாவது கேரக்ரடில் வந்து செல்வது போன்ற கதாபாத்திரத்தை தான் தருவதாக சொல்கிறார்களாம்.
ஹீரோக்களுக்கு வளர்ந்து வரும் இளம் நடிகைகளை ஜோடியாக்கிவிட்டு நயனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை தருகிறார்களாம். அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தில் கூட டாப்ஸிக்கு தான் அதிக முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது. ராஜா ராணி படத்தில் கூட நஸ்ரியா நஸீம் தான் ஆர்யாவின் ஜோடியாம்
அதனால் இனி ஹீரோயிசம் உள்ள படங்களில் நடிப்பதில்லை என்று நயன் முடிவு செய்துள்ளாராம். கஹானி ரீமேக்கில் நடிக்கும் நயன் அது போன்று தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் இனி நடிப்பாராம்.
Post a Comment