நாம் முன்பே சொன்னதுபோல கார்த்தி - ஹன்சிகா நடித்த பிரியாணி படத்தை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்' படம் வருகிறது.
வேறு சில படங்களும் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் முன்பாகவே வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி' படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், போட்டியில்லாத சூழலில் வெளியாக வேண்டும் என்ற காரணத்தால், பிரியாணி படத்தை டிசம்பர்-20ந் தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பிரியாணி' படத்தில் கார்த்தியுடன் பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடிக்க முடியாத நிலையில், அவர் இந்த பிரியாணியை மிகவும் நம்பியுள்ளார்.
Post a Comment