குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

|

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

Post a Comment