ஏற்கனவே ஜனவரி ரேஸில் ரஜினி, அஜீத்: இதில் லேட்டஸ்டாக சேர்ந்த கமல்

|

ஏற்கனவே ஜனவரி ரேஸில் ரஜினி, அஜீத்: இதில் லேட்டஸ்டாக சேர்ந்த கமல்

சென்னை: ஜனவரி 26ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜீத் குமாரின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. கோச்சடையான் ரிலீஸாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில் கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். கமல் படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்தை போன்று இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் முக்கிய நடிகர்களின் படங்களாக ரிலீஸாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. கோச்சடையான் மட்டும் 700 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யார் படத்திற்கும் பாதிப்பில்லாமல் படங்களை வெளியிட ஆலோசனை நடந்து வருகிறதாம்.

 

Post a Comment