சென்னை: நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு போனில் மிரட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் டாஸ்மாக் ஸ்பெஷலிஸ்டான நடிகர் மயில்சாமி, தில், தூள், திமிரு, பட்டத்து யானை, தகராறு என நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் விருகம்பாக்கம் போலீசில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அதில் பேசிய மர்ம நபர் ‘நீங்கள் எனக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்' என்று கூறி விட்டு இணைப்பத் துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது ‘ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
Post a Comment