சென்னை: இசைஞானி பக்தர்கள், அன்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இப்போதைக்கு இனிப்பான செய்தி, அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பூரணமாக குணமடைந்து வருகிறார் என்பதுதான்.
ஆம்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இளையராஜாவை இப்போது சாதாரண வார்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
குடும்பத்தினர் அருகிலிருந்து கவனிக்க, மிக நெருக்கமான நண்பரான எஸ்பி பாலசுப்ரமணியம் நேரில் பார்த்து கண்கலங்க நலம்விசாரித்துவிட்டுச் சென்றார்.
நண்பர்களிடமிருந்தும் திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் ஏராளமான போன் கால்கள்.. விசாரிப்புகள். அத்தனை பேருக்கும் அப்பா நல்லாருக்கார் என பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் ராஜா.
வரும் 28-ம் தேதி ராஜாவின் கிங் ஆப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதற்கான ஒத்திகையின்போதுதான் இளையராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்னும் நான்கு தினங்கள்தான் உள்ளன.
இளையராஜா இப்போதைக்கு ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே புத்தாண்டுக்குப் பிறகு கச்சேரியை நடத்தலாமா என விழா ஏற்பாட்டாளர்கள் கேட்க, 'சொன்னபடி நடத்தலாம் என்றுதான் தோன்றுகிறது. எனக்கு ஒன்றுமில்லை... சீக்கிரம் வந்துடறேன்,' என்றே இளையராஜா பதிலளித்துள்ளார்.
Post a Comment