சென்னை: தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட "அருந்ததி" திரைப்படம் பெங்காலியில் ரீமேக் ஆகி அங்கும் வசூலைக் குவித்தது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
அனுஷ்காவின் நடிப்பில் உருவான "அருந்ததி" ஒரு சமஸ்தானைத்தையே கட்டி ஆண்ட வீரமான ராணி ஒருத்தியின் கதையாக உருவாகியிருந்தது.
ஜக்கம்மா என்று அழைக்கப்பட்ட அக்கதாபாத்திரத்தில் அனுஷ்கா இரண்டு மொழிகளிலுமே நடித்திருந்தார்.
வசூல் மழையில் குளித்த அருந்ததி:
போர் கலைகள் தெரிந்த ராணியின் கம்பீரமும், ராஜவம்சத்தின் திரண்ட தோள்களின் அழகுமாக அனுஷ்கா நடித்திருந்த "அருந்ததி" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸையே தகர்க்கும் அளவிற்கு வசூல் மழையில் குளித்தது.
பெங்காலியில் ரீமேக்:
இந்நிலையில்தான் "அருந்ததி" என்ற பெயரிலேயே பெங்காலி மொழியிலும் ரீமேக் ஆகி வெளிவந்துள்ளது. கிட்டதட்ட 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் அங்கும் வசூலில் பிய்த்துக் கொண்டு ஓடியுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள்:
சுஷித் மாண்டல் இயக்கத்தில் இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ் பிலிம்ஸ் மற்றும் சுரிந்தர் பிலிம்ஸ் தயாரித்து திரை இட்டது.
அருந்ததியாய் கலக்கிய கோயல்:
இப்படத்தில் நடிகை கோயல் மாலிக் அருந்ததியாக கலக்கியுள்ளார். பெங்காலி பாரம்பரிய உடைகளையும், அணிகலன்களையும் அணிந்து வாள் சண்டையில் ஆகட்டும், இந்நாள் அருந்ததி கதாபாத்திரத்தில் ஆகட்டும் அனுஷ்காவைப் போலவே அசத்தியுள்ளார் அவர்.
வாள் சண்டைப் பயிற்சி:
இப்படத்திற்காகவே வாள் சண்டையும், குதிரை ஏற்றமும் கற்றுக் கொண்டுள்ளார் அவர்.
ஜய் ஜய் மா பாடல்:
இசையமைப்பாளராக ஜீத் கங்குலி இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். ஜக்கம்மா பாடல் பெங்காலியில் ஜய் ஜய் மா என்று ரீமேக் செய்யப்பட்டுள்ளது. என்ன ஜக்கம்மா என்ற பெயரைத்தான் முனிமா ஆக்கிவிட்டார்கள்.
அதிரவைக்கும் இந்திரா:
சோனு நடித்த ருத்ரா கதாபாத்திரத்தில் இந்திரனெய்ல் சென்குப்தா நடித்துள்ளார். அருந்ததீதீ என்று அழைப்பதில் சோனுவைப் போலவே அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.
பெங்காலியில் ரசிக்க:
மொத்ததில் தமிழில் பார்த்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக்காக பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக அருந்ததி பெங்காலி படைப்பை பார்த்து ரசிக்கலாம்.
Post a Comment