சென்னை: பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கியுள்ளார் நடிகர் சூர்யா.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது கோம்பை பெருங்காடு என்னும் கிராமம். இந்த கிராமத்தினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை. காரணம் பள்ளிக்கு செல்ல தினமும் 10 கிலோமீட்டர் நடக்க வேண்டும். இந்நிலையிலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் என்பவரின் மகள் ரேவதி பிளஸ் டூ வரை படித்து முடித்தார்.
ஆனால் அவரால் அதற்கு பிறகு கல்லூரிக்கு சென்று படிக்க வசதி வாய்ப்பு இல்லை. இதையடுத்து அவர் பெற்றோருடன் காட்டு வேலைக்கு சென்றார். இந்நிலையில் இது குறித்து நடிகர் சூர்யாவுக்கு தகவல் தெரிவித்தனர் அவரின் அகரம் பவுன்டேஷன் நிர்வாகிகள். உடனே அவர் ரேவதிக்கு உதவுமாறு கூறினார்.
இதையடுத்து ரேவதி சென்னை அப்பலோ கல்லூரியில் பி.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ளார். ரேவதியின் படிப்பு செலவை அகரம் பவுன்டேஷன் ஏற்றுள்ளது.
பி.சி.ஏ.வை முடித்த பிறகு சி.ஏ. படிக்க விரும்புகிறார் ரேவதி. படித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளை படிக்க வைக்கும் ஆசை அவரிடம் உள்ளது.
Post a Comment