சென்னை: வானம் கலர் ரிப்பன் பாடல் இடம் பெற்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலமே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்ற நடிகை இவர்.
மலையாள வரவான இவரின் அழகு தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்ததன் கைமேல் பலனாக நிறைய படங்களில் நடித்து வருகிறார் நடிகை. அடுத்தடுத்து தனது படங்கள் வெளியானால் தன் மார்க்கெட் இன்னும் ஏறும் என எதிர்பார்ப்பில் நடிகை இருக்கிறாராம்.
இதனால், துணிச்சலாக தற்போது நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஆயிரத்து எட்டு கண்டிசன்களைப் போடுகிறாராம். குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் தங்குவேன், இந்த சாப்பாடு தான் சாப்பிடுவேன் என கறாராகச் சொல்லி விடுகிறேன்.
இது போக, புதிய படங்களுக்காகத் தன்னை அணுகும் படத் தயாரிப்பாளர்களிடன் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் கால்ஷீட், இல்லையென்றால் நடையைக் கட்டுங்கள் எனக் கூறி வருகிறாராம்.
ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டு அடுத்த படத்தில் அடி வாங்கியோர் ஆயிரம், அது தெரியாமல் இந்த சின்னப் பெண் இப்படி நடந்து கொள்கிறாரே என அவரது வளர்ச்சியில் அக்கறை காட்டும் சிலர் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.
தற்போது ஐந்து படங்களில் நடித்து வரும் நடிகை கால்ஷீட் விசயத்திலும் சொதப்பி வருவதாக படக் குழுவினர் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment