இயக்குனரின் காமெடி தம்பிக்கு ஆப்பு வைத்த சிங்கம்

|

சென்னை: பெயரில் ராஜாவை வைத்திருக்கும் இயக்குனர் படத்தில் நடித்து வரும் சிங்கம் காமெடி நடிகர் வரும் காட்சிகளை குறைக்குமாறு தெரிவித்துவிட்டாராம்.

சிங்கம் தனது தம்பியை வைத்து இயக்கிய பெயரில் ராஜாவை வைத்திருக்கும் இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வழக்கம் போன்று இந்த படத்திலும் தனது காமெடி தம்பிக்கு ஏகப்பட்ட காட்சிகளை வைத்திருந்தாராம். படம் முழுக்க தம்பி சிங்கத்துடன் வருவது போன்று கதை அமைத்திருந்தாராம்.

தம்பியின் கதாபாத்திரம் சிங்கத்தையே கிண்டல் செய்வது போன்று காட்சிகள் இருந்ததாம். இதை எல்லாம் அறிந்த சிங்கம் தம்பி நடிகரின் காட்சிகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டாராம். மேலும் தன்னை கிண்டல் செய்யும் வேலை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சிங்கம்.

இதனால் காமெடி நடிகர் சிங்கம் மீது கோபத்தில் உள்ளாராம். அண்ணனின் இந்த படத்தில் நடிப்பதற்காக தம்பி கால்ஷீட்டை வாரி வழங்கி இருந்தாராம். இந்நிலையில் அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.

 

Post a Comment