மும்பை: பாலிவுட் பாட்ஷா என அழைக்கப் படும் ஷாரூக், தனது கடைசி மகனின் புகைப்படத்தையும், தனது சிறு வயது படத்தையும் இணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஷாரூக். அவரது மூன்றாவது மகன் அப்ராமுக்கு இரண்டு வயதாகிறது.
Sisters r so sweet.I asked mine if she remembers if I looked like lil AbRam.She said "NOO!!U were very handsome" haha pic.twitter.com/tnlbVnFrvD
— Shah Rukh Khan (@iamsrk) May 1, 2015 இந்நிலையில், சமீபத்தில் ஷாரூக்கிற்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதாவது தனது மகன் அப்ராம், தான் சிறுவயதில் இருப்பது போன்றே இருக்கிறானா என்பது தான் அது. இது தொடர்பாக அவர் தனது சகோதரிகளிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பாசக்கார சகோதரிகள், ‘இல்லப்பா, நீ அப்ராமை விட ரொம்ப அழகா இருந்தே' என சிரித்துக் கொண்டே கூறியுள்ளனர்.
இத்தகவலை ஷாரூக்கே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடவே தன்னை அழகென்று கூறிய சகோதரிகளை ‘பாசக்காரர்கள்' என ஷாரூக் பாராட்டியுள்ளார்.
கூடவே, தனது சிறுவயது புகைப்படத்துடன், அப்ராமுடையதையும் இணைத்து அவர் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பலர், அப்ராம் அப்படியே ஷாரூக்கின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment