ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள காஞ்சனா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் மிக ஆபாசமாக உள்ளதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.
இந்தப் பாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
"பாட்டு கேட்டேன்.. குழி காய்ந்து கிடக்குது வாய்யா... மொட்டை பையன் கெட்ட பையன்...அருவருப்பின் உச்சம்.
பாடலாக எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் எழுதலாம், டான்ஸ் மூவ்மென்டாக உடலுறவு அசைவுகளையும் செய்யலாம். அதை சென்சாரும் விட்டுவிடும்... மக்களும் குடும்பத்தோடு பார்த்து ரசிப்பார்கள். சமூக பொறுப்பு என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தால் எதையாவது செய்து பணம் சேர்க்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள கவிஞர் சினேகனும், தன் பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பாடலை எழுதியிருப்பவர் விவேகா ஆகும். இதைக் குறிப்பிட்டுள்ள சினேகன், "விவேகாவுக்கு இது வழக்கமான ஒன்றுதான்" என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment