விமானத்தில் வந்த நடிகை ரோஜாவிடம் ரூ 2.5லட்சம் திருட்டு

|

Roja
கோவை: விமானத்தில் வந்த நடிகை ரோஜாவிடம் ரூ 2.5 லட்சம் பணத்தை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகை கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஒத்தப்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் வந்தார்.
இரவு 8-40 மணி அளவில் அந்த விமானம் கோவை வந்தது. விமானத்தில் இருந்து இறங்கும்போது, ரோஜா தன்னுடைய கைப்பையைத் தேடினார். அதில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பணம் வைத்திருந்தார். அந்தப் பை காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா, விமானநிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணப்பை திருட்டுப்போன தகவலை தெரிவித்தார். மேலும் தனியார் விமான நிறுவனத்தின் மேலாளரிடமும் இதுகுறித்து புகார் மனு எழுதிக்கொடுத்தார்.
பின்னர் நடிகை ரோஜா, கார் மூலம் கேரள மாநிலம் ஒத்தப்பாலத்துக்கு புறப்பட்டு சென்றார். ரோஜாவிடம் பணம் திருட்டுப்போனது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
திருட்டுப் போன பணப்பை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Post a Comment