"ராவணன்" படத்திற்கு மணிரத்தினம் அடுத்த இயக்கவுள்ள படம் "பொன்னியின் செல்வன்". மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ள இப்படம் ராஜராஜ சோழன் காலத்து கதையாகும். அரசகாலத்து கதை என்பதால் இந்தபடத்திற்கு இளையராஜா தான் பொருத்தமான இசையமைக்க முடியும் என்று மணிரத்தினம் எண்ணியுள்ளார். இதனால் படத்திற்கு அவரையே இசையமைக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழில் மணிரத்தினம் இயக்கிய முதல்படமான "பகல்நிலவு" முதல் "தளபதி" வரை அனைத்து படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த படப்பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாயின. அப்படி ஹிட் கொடுத்த இவர்களது கூட்டணி "ரோஜா" படத்தில் முறிந்தது. "ரோஜா" படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். "ரோஜா" முதல் கடைசியாக வந்த "ராவணன்" வரை ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்றிய மணிரத்தினம், இப்போது "பொன்னியின் செல்வன்" படத்தின் மூலம் மீண்டும் இளையராஜாவுடன் இணையவுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவேளிக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
Post a Comment