180-க்கு என்ன அர்த்தம்?
2/16/2011 3:15:22 PM
2/16/2011 3:15:22 PM
ஜெயேந்திரா இயக்கும், '180' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த். தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் நித்யா மேனன், பிரியா ஆனந்த் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படம் பற்றி சித்தார்த் கூறியதாவது: மற்ற வருடங்களை விட இந்த வருடம் பிசியாக இருக்கிறேன். இரண்டு நாள் விடுமுறை கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது. தினமும் ஷூட்டிங்கில்தான் இருக்கிறேன். இப்போது நடித்து வரும் படமான '180', வழக்கமான கதைகளத்திலிருந்து மாறுபட்டது. படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள். அதை சொல்லி புரியவைப்பதை விட படம் பார்த்தால் அந்த தலைப்பு, நூற்றுக்கு நூறு சரி என்று தெரியும். இந்தப் படத்தை அடுத்து தெலுங்கில் வேணு ஸ்ரீராம் இயக்கும் படம், தீபா மேத்தாவின் 'மிட்நைட் சில்ரன்' படங்களில் நடிக்கிறேன்.
Source: Dinakaran
Post a Comment