நடிகை பாக்யாஞ்சலிக்கு அடுத்த மாதம் திருமணம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை பாக்யாஞ்சலிக்கு அடுத்த மாதம் திருமணம்

3/4/2011 10:27:51 AM

வில்லன் நடிகர் மீது புகார் கூறிய நடிகை பாக்யாஞ்சலி போட்டோகிராபரை மணக்கிறார். கேரளாவை சேர்ந்தவர் பாக்யாஞ்சலி. தமிழில், 'உன்னை காதலிப்பேன்', 'நெல்லு', 'கோட்டி' படங்களில் கதாநாயகியாக நடித்தார். 'உன்னைக் காதலிப்பேன்' படத்தில் நடித்தபோது, வில்லன் நடிகர் வேலு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேராளாவை சேர்ந்த ஸ்டில் போட்டோகிராபர் அனிஸ் உபசனாவுக்கும் பாக்யாஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோயில் இவர்கள் திருமணம் நடக்கிறது. மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்பது பற்றி, வருங்கால கணவர் முடிவு செய்வார் என்று பாக்யாஞ்சலி கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment