த்ரிஷா கல்யாணம்: ஆந்திர தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது?

|

http://meenakam.com/newsnet/wp-content/uploads/2011/02/actress_trisha_krishnan_stills_4.jpg
த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தாயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திருமணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கிறது என்று செய்திகள் வந்தது. இதற்கு த்ரிஷா மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில்.

தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரிஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்கனவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி குறித்து அவரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை காரணம், இதுபோன்ற வதந்திகளுக்கு தேவையில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.
 

Post a Comment