ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி
3/28/2011 11:50:12 AM
3/28/2011 11:50:12 AM
அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். தமிழில், 'புதையல்', 'மாப்பிள்ளை கவுண்டர்', 'வேதம்', 'மானஸ்தன்' உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சாக்ஷி. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதன் ஷூட்டிங் பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்காக, வெளிநாட்டில் இருந்து 150 டான்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment