யானைகள் பற்றிய ஆய்வுக்கு இயக்குனர் பிரபு சாலமன் 3ஆயிரம் கி.மீ பயணம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யானைகள் பற்றிய ஆய்வுக்கு இயக்குனர் பிரபு சாலமன் 3 ஆயிரம் கி.மீ பயணம்!

4/11/2011 12:27:31 PM
தனது அடுத்த படத்துக்காக, யானைகள் பற்றி ஆய்வு செய்ய மூவாயிரம் கி.மீ பயணம் செய்துள்ளதாக இயக்குனர் பிரபு சாலமன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளில், யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து துவம்சம் செய்வதை செய்திகளில் படிக்கிறோம். திடீரென்று ஏன் இப்படி நிகழ்கிறது? காடுகளை விட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது ஏன்? இதற்கு யார் காரணம் என்பதை ஆய்வு செய்தேன். நூறு சதவீத உண்மைச் சம்பவங்களுடன், இளம் ஜோடிகளின் காதலை சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. யானைகள் குறித்து ஆய்வு செய்ய, 3 ஆயிரம் கி.மீ பயணம் செய்துள்ளேன். இந்த ஆண்டு, யானைகளின் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளனர். யானைகளின் பின்புலத்தில் இப்படம் உருவாவதை பெரிதாக கருதுகிறேன். ஒசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் ஐதராபாத், அரக்குவேலி பகுதிகளில் லொகேஷன் தேர்வு செய்துள்ளேன். ஜூன், ஜூலையில் இப்பகுதிகளில் சீசன் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.




Source: Dinakaran
 

Post a Comment