5/25/2011 12:26:49 PM
'உதயன்' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார் அருள்நிதி. முத்தமிழ் படைப்பகம் சார்பில் பிரபாகரன் தயாரிக்கும் படம் 'உதயன்'. இதில் அருள்நிதி, ப்ரணிதா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் சாப்ளின் கூறியதாவது: 'வம்சம்' படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்த அருள்நிதி, இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வங்கி மனேஜராக இருக்கும் அவர் எதையும் வெளிப்படையாகச் செய்பவர். காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்வதற்கு முன்பே கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்பவர். அப்படிப்பட்டவரின் காதலுக்கு வில்லன்கள் முளைக்கிறார்கள். இவரும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து காதலியை எப்படி கைபிடிக்கிறார் என்பது கதை. சண்டைக் காட்சிகளில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். வைஸ்கேம் என்ற கேமராவை பயன்படுத்தி சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கிறோம். இது நொடிக்கு 2 ஆயிரம் பிரேம்வரை எடுக்கக் கூடியது. கன்னடம், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ப்ரணிதாவை தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். மணிகாந்த் கத்ரி இசை அமைக்கிறார். படத்தில் 6 பாடல்கள். ஸ்ருதி கமல் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
Post a Comment