இளம் பெண்களின் உள்ளம் கவர் நாயகர்களில் ஒருவராக சில காலத்திற்கு முன்பு வரை விளங்கிய மாதவன் தனது 41வது பிறந்த நாளை சத்தமின்றி, எளிமையாக கொண்டாடி முடித்துள்ளார்.
புதன்கிழமை மாதவனுக்குப் பிறந்த நாளாகும். இதை எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் கொண்டாடினார் மாதவன். நீண்ட காலத்திற்கு முன்பே பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டாராம் மாதவன். பார்ட்டிக்கோ, வேறு எந்தவிதமான கொண்டாட்டத்திலோ அவர் ஈடுபடுவதில்லை.
மாறாக அன்று முழுவதும் வீட்டிலேயே இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவாராம்.
தனது 41வது பிறந்த நாளையும் கூட மனைவி, மகனுடன் ஜாலியாக வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தாராம்.
மன்மதன் அம்பு படத்திற்குப் பின்னர் தற்போது வேட்டை படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அப்படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த மெனக்கெடுதலில் ஈடுபட்டுள்ளாராம்.
Post a Comment