8/13/2011 12:20:54 PM
தமிழ்க்குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்தார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது என் அம்மாவின் வழக்கம். இப்போது 20-வது வயதில் 20-வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். இந்தக் குழந்தைகள் அவரவர் வீட்டில் வளர்வார்கள். அது தன் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்களுக்கான செலவு எங்களுடையது. இதுவரை மும்பை குழந்தைகளை தத்தெடுத்தோம். அடுத்து தமிழ்நாட்டுக் குழந்தை. டிரஸ்ட் தொடங்கி நிறைய குழந்தைகளை பராமரிக்கும் எண்ணம் இருக்கிறது. நான் நடித்துள்ள 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களில் வித்தியாசமான ஹன்சிகாவை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment