அப்பா நலமாக இருக்கிறார் : ஐஸ்வர்யா!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அப்பா நலமாக இருக்கிறார் : ஐஸ்வர்யா!

5/5/2011 5:52:34 PM

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல் நலம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இரண்டு தினங்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராணா படத்தின் துவக்க விழாவின் போது ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை வரை அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பினர். வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில்,நேற்று இரவு மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இரவே இசபெல்லா மருத்துவனையின் அவசர சிகிச்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். மருத்துவமனை முன்பு ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்துவிட்டனர்.

இதையடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம், “அப்பாவின் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பாவுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்'' என்றார். ரஜினிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான கிஷோர் கூறுகையில், “ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலும் இரண்டு தினங்கள் இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்..”, என்றார்.

 

Post a Comment