அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக இலியானா நடித்துள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கனலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதுபற்றி ஷங்கர் கூறியதாவது:- `நண்பன்' படப்பிடிப்பு 100 சதவீதம் முடிந்துள்ளது. `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. `நண்பன்' படத்தின் பாடல் டிசம்பரில் 23ல் வெளியாகும் என்றார். பாடல் சி.டி. வெளியீட்டு விழாவிற்கு அமீர்கானை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment