போகஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரகுமான் ஹுயஸ், பிரியா, ஹென்றி, ரவிசுந்தரலிங்கம், மனோன்மணியன், கீர் ரகுமான் நடிக்கும் படம், 'மகாவம்சம்'. ஒளிப்பதிவு, முகமது காசிம். இசை, எட்ரி. இயக்கம், யுஸ்ரி. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: 1,900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. பல்லவர்களின் செல்வாக்கு வளர்வதற்கு முன், மலேசியாவில் மலாய் அரசாட்சியை உருவாக்கியவன், மாறன் மகாவம்சன். கப்பல் ஓட்டுவதில் வல்லவன், மகாவீரன். கோவா சென்ற அவன், அரச குடும்பத்தைச் சேர்ந்த சுந்தருடன் போரிட்டு வெற்றிபெறுகிறான். அப்போது சுந்தரின் தங்கை யசோதாவுடன் காதல் மலர்கிறது. ரோமாபுரி இளவரசன் மார்கஸ், மாறன் தன்னுடன் இருக்க ஆசைப்படுகிறான். சில நிபந்தனைகளுடன் அவனுடன் தங்கி, மலேசிய தீவுகளில் ஆட்சி அமைத்த சுவாரஸ்யமான சம்பவங்களை படம் சொல்கிறது. மாறன் மகாவம்சனின் வாரிசுகள்தான் இன்றளவிலும் மலேசியாவின் அதிகார வர்க்கத்தில் இருக்கின்றனர். தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் சரித்திரப் பதிவாக 'மகாவம்சம்' உருவாகியுள்ளது.
Post a Comment