சமீரா ரெட்டி கணக்கில் ரூ 4 லட்சம் சுருட்டல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீரா ரெட்டியின் கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டில் எப்படியோ புகுந்து வெளிநாட்டு இளைஞர் ஒருவர் ரூ.4 லட்சம் சுருட்டியுள்ளார். வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: சமீபத்தில் என் செல்போனில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. முதலில் எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை அழைப்பு வந்ததால் பேசினேன். மறுமுனையில் பேசியவர். தான் அமெரிக்காவில் வாழும் இந்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரும், நண்பர்களும் சேர்ந்து என்னுடைய  கணக்கிலிருந்து பணம் எடுத்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக என் வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. பணம் எடுத்துக்கொள்ளும்படி நான் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இச்சம்பவம் அதிர்ச்சி அளித்தது.

தொடர்ந்து பேசிய மர்ம நபர், 'பணம் எடுத்த பின் கவனித்தபோது உங்கள் பெயரில் அந்த அக்கவுன்ட் இருந்தது. நான் உங்கள் ரசிகன். அதனால்  எடுத்த பணத்தை உங்கள் கணக்கிலேயே செலுத்தி விட்டேன். நண்பர்கள் 'சுட்ட' பணத்துக்கு நான் பொறுப்பாக முடியாது' என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். என்ன செய்வதென்று  தெரியாமல் விழித்தேன். என்னுடைய கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டில் எப்படி மோசடியாக பணம் எடுக்கப்பட்டது என்பது பற்றி டிப்ஸ் கொடுத்ததுடன், 'இனிமேல் ஆன்லைனிலோ, கிரெடிட் கார்டிலோ பணம் எடுக்காதீர்கள்' என்று எச்சரித்தார். பிறகு எனது கணக்கை சரிபார்த்தபோது, அதில் ரூ. 1 லட்சம் கிரெடிட் ஆகி இருந்தது. ஆனால் மீதி 3 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டேன். இதுவொரு அதிர்ச்சி தரும் அனுபவமாக அமைந்தது. இனிமேல் ஷாப்பிங் செய்தால் அதற்காக ஆன்லைனையோ, கிரெடிட் கார்டையோ பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.



 

Post a Comment