ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க கமல் மறுப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தன்னுடன் இணைந்து நடிக்க மகள் ஸ்ருதி தெரிவித்த விருப்பத்தை நிராகரித்தார் கமல். இதுபற்றி கமல்ஹாசன் கூறியதாவது: என்னுடைய சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் அறிமுகமாகாமல் வெளிப்படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி. தமிழ், இந்தி மொழிகளில் நடிகையாக சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. 'உன்னைப்போல் ஒருவன்' என் பேனரில் உருவான படம். அதில் இசை அமைப்பாளாளர் என்ற பொறுப்பை மட்டும் ஸ்ருதி ஏற்றிருந்தார். 'இருவரும் சேர்ந்து நடிப்பீர்களா?' என்கிறார்கள். ஸ்ருதியும் இப்படி விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் அமையாமல் வெறும் பேருக்காக நடிக்க முடியாது. இப்போது அவர் ஒரு ஸ்டார். அவரது படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்புகிறேன்.

மகளாக மட்டுமில்லாமல் எனக்கு பயிற்சியாளராகவும் ஸ்ருதி இருந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் அமெரிக்க பாணியில் ஆங்கிலம் பேச வேண்டி இருந்தது. அப்போதுதான் ஸ்ருதியும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர் தான் எனக்கு அமெரிக்கர்கள் பாணியில் ஆங்கிலம் பேச பயிற்சி அளித்தார். எனது மற்றொரு மகள் 'அக்ஷரா நடிக்க வருவாரா?' என்கிறார்கள். அவருக்கு கேமராவுக்கு பின்னால் பணியாற்ற பிடித்திருக்கிறது. நானும் அப்படித்தான் எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின்னர்தான் கேமராவுக்கு முன் நடிக்க வந்தேன்.


 

Post a Comment