'பசங்க' புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், 'மெரினா'. பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிவ கார்த்திகேயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா, மெரினா கடற்கரையில் இன்று நடக்கிறது. இதுபற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது கூறியதாவது: மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது. படத்துக்கான புரமோஷன் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இது வித்தியாசமாக இருக்கும். இன்று பாடல் வெளியீடு இருக்கிறது. மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டு மெரினா பகுதியில் வாழும் சிறுவர்களை கொண்டு பாடல் வெளியிடப்படுகிறது. படம் முடிந்துவிட்டது. பிப்ரவரி மாதம் படம் வெளியாகும். இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.
Post a Comment