அமுதன் இயக்கும் 'ரெண்டாவது பட'த்தில் விஜயலட்சுமி சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இரண்டு சவாலான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று 'வன யுத்தம்'. சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டர். அடுத்து 'ரெண்டாவது படம்'. இதில் சி.பி.ஐ அதிகாரி. இதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்கிறேன். என் தோழியின் அம்மா சி.பி.ஐ.யில் பணியாற்றுகிறார். அவரை சந்தித்து சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டேன். இளம் அதிகாரி என்பதால் மாடர்ன் உடைகள் அணிந்து நடிக்கிறேன். இரண்டு படங்களும் நேரெதிர் கதைகளைக் கொண்டது.
Post a Comment