அறுவடைக்கு காத்திருக்கிறது கும்கி டீம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படம், 'கும்கி'. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது: யானைகளின் பின்னணியின் இனிமையான காதல் கதையை சொல்கிறேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டது. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி சீசனுக்காக, கடந்த ஜூன் மாதம் வரை காத்திருந்து ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். அங்கு பல ரிஸ்கான காட்சிகளை படமாக்கியுள்ளோம். பிறகு அக்டோபர் மாதம் வரை மஞ்சள் பூக்கள் சீசனுக்காகக் காத்திருந்தோம். பின்னர் விசாகப்பட்டினத்தில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த இந்த பூக்களினிடையே படம் பிடித்தோம். இது விஷூவலாக புதுமையாக இருக்கும். இப்போது அறுவடை சீசனுக்காகக் காத்திருக்கிறோம். வரும் பிப்ரவரி மாதம் அறுவடை தொடங்கும். அப்போது சில முக்கியமான காட்சிகளை எடுக்க இருக்கிறோம். இந்த காட்சியை எடுத்தால் படம் முடிந்துவிடும். அதற்காக காத்திருக்கும் வேளையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.


 

Post a Comment