மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,''ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, ''சிறந்த தம்பதிகளாக அம்மாவும், அப்பாவும் வாழ்கின்றனர். கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது'' என்று கூறி உள்ளார்.


 

Post a Comment