எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் மேக்னா ராஜ். இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சரத்குமாருடன் நான் நடித்துள்ள 'நரசிம்மன் ஐபிஎஸ்' என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் 'அச்சன்டே ஆண்மக்கள்' என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். 'அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே' என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா வேடத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து 'நந்தா நந்திதா' வெளியாக உள்ளது. இவ்வாறு மேக்னா ராஜ் கூறினார்.
Post a Comment