புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் புகுந்தார் ஸ்ரேயா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சமீபகாலமாக தமிழில் ஸ்ரேயா புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தி, தெலுங்கில் மட்டும் நடித்து வருகிறார். புதுமுக நடிகைகளின் வரவும், படத்தின் வெற்றி தோல்வியின் அதிர்ஷ்ட சென்டிமென்டாலும் ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்களை நம்பாமல் புதுமுகங்களை நம்பி படம் எடுப்பவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா. 'லைப் ஈஸ் பியூட்டிபுல்' என்ற படத்தை இவர் இயக்குகிறார். வழக்கம்போல் இப்படத்திலும் புதுமுக ஜோடிகளை தேர்வு செய்தார். கடந்த நவம்பர் மாதமே படத்தை முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட புதுமுக ஹீரோயின் அமெரிக்காவில் வாழும் இந்தியர். கால்ஷீட் கொடுத்த நடிகை குறிப்பிட்ட தினத்தில் வரவில்லை. இதையடுத்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவரை நம்பி ஷூட்டிங்கை தள்ளி வைத்ததுதான் மிச்சம். ஆனால் அமெரிக்கா சென்றவர் திரும்பவில்லை. மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர் சேகர் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். ஸ்ரேயாவை அணுகி நிலைமையை விளக்கி கால்ஷீட் கேட்டார். உடனடியாக ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்தார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.


 

Post a Comment