வீணா மாலிக்கை மணக்க முண்டியடிக்கும் 71,000 பேர்!

|


பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக்கை மணக்க 71,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் படுகுஷியாக உள்ளார்.

பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக் 'வீணா கா விவாஹ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த காலத்தில் ராஜாக்கள் தங்கள் மகள்களுக்கு வைத்த சுயம்வரம் போன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆடவர்களில் தன் மனதுக்குப் பிடித்தவரை வீணா தேர்வு செய்வார். இது போன்ற சுயம்வர நிகழ்ச்சியை ஏற்கனவே பாலிவுட் ஐட்டம் நடிகை ராக்கி சாவந்த், மறைந்த மத்திய அமைச்சர் பிரவீனா மஹாஜனின் மகன் ராகுல் மஹாஜன் மற்றும் ரத்தன் ராஜ்புட் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

ராக்கியை மணக்க 30,000 பேரும், ராகுல் மகாஜனை மணக்க 43,000 பேரும், ரத்தனை மணக்க 54,000 பேரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிகமாக 71,000 பேர் வீணாவை மணக்க முண்டியடித்துள்ளனர்.

இதனால் வீணா பெரும் குஷியாகியுள்ளாராம். இருப்பினும் அத்தனை பேரையும் மணக்க முடியாதே. எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் தன்னைக் கவரும் நபரை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாக வீணா தெரிவித்துள்ளார்.
 

Post a Comment