ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெலிஷ்ட்டாக விஜய் நடித்தியிருக்கிறார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. துப்பாக்கி படத்தில் இளைய தளபதி விஜய் 'பார்ட்டி சாங்' ஒன்றை பாடியுள்ளார் என்பது படத்தின் லேட்டஸ்ட் தகவல். முதலில் விஜய்யின் குரலில் பாட வைத்த ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் இந்த பாட்டு முழுவதும் பாடினால் நல்லாயிருக்கும் என சொல்ல, விஜய்யும் பாட ஒப்பபுக் கொண்டாராம்.
Post a Comment