தணிக்கையில் ஏ சான்றிதழ் தருவதால் சிறுபட்ஜெட் படங்கள் வரி சுமையால் பாதிக்கிறது என்றார் இயக்குனர் சுப்பிரமணியன். ஆர்.சுப்பிரமணியன், 'அபியும் நானும்', 'வாமனன்' படங்களுக்கு வசனம் எழுதியதுடன் 'சேவற்கொடி' படத்தை இயக்கியவர். இவர் கூறியதாவது: 2 படங்களுக்கு வசனம் எழுதிவிட்டு முதன்முறையாக சேவற்கொடி படம் இயக்கினேன். புது ஹீரோ அருண் பாலாஜி என்பவரை நடிக்க வைத்தேன். இவர் நீச்சல் வீரர். வில்லன் பவன். ஹீரோயின் பாமா. இது பெரிய பட்ஜெட் படம் அல்ல. இப்படத்தை தணிக்கைக்காக திரையிட்டபோது படத்தில் மது குடிக்கும் காட்சி வருவதால் 'ஏÕ சான்றிதழ்தான் தருவோம் என்றார்கள். என் தரப்பில் விளக்கம் அளித்தேன். அதை ஏற்கவில்லை. 'ஏÕ சான்றுதான் தருவோம் என்று கண்டிப்பாக கூறிவிட்ட்£ர்கள். ஆனால் மது குடிக்கும் காட்சிகளுடன் உருவான ஒரு சில பெரிய படங்களுக்கு 'யூ' சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். அதை தணிக்கை அதிகாரிகள் எப்படி தந்தார்கள் என்று தெரியவில்லை. 'ஏ' சான்றிதழ் தரப்பட்டால் 30 சதவீதம் மாநில அரசுக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது பின்னர்தான் தெரிந்தது. சிறுபட்ஜெட் படத்துக்கு இதுபோன்ற கூடுதல் செலவு தயாரிப்பாளர்களுக்கு பெரிய சுமை. இதை சீர்படுத்த திரையுலகினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post a Comment