யுவனவை தொடர்ந்து செல்வராகவன் படத்தி லிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷும் நீக்கப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியபோது, அதிலிருந்து யுவன் ஷங்கர் ராஜாவை நீக்கினார் செல்வராகவன். இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என இருவரும் முடிவு செய்தனர். இதற்கு, இருவருக்கும் இடையே பணப் பிரச்னை ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இனி தனது படங்களில் பிரகாஷ்தான் பணியாற்றுவார் என செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து, 'மயக்கம் என்ன' படத்துக்கும் பிரகாஷ் இசையமைத்தார். இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படத்தை ஆரம்பித்தார் செல்வராகவன். இதிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் இப்போது திடீரென பிரகாஷ் நீக்கப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் விரும்பிய மெட்டுகள் கிடைக்காததால் அவர் இசையமைப்பாளரை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையை டுவிட்டரில், "ஹாரிஸ் இசையில் கார்த்திக் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. வைரமுத்து பாடலை எழுதியிருக்கிறார். சூப்பர் மெலடியாக இந்த பாடல் உருவாகியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.


 

Post a Comment