பிராட் பிட், ஜூலி நிச்சயதார்த்தம் முடிந்தது- நிச்சயதார்த்த மோதிரம் ரூ.1.28 கோடி

|


Brad Pitt and Angelina Jolie
திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வரும் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஒரு வழியாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர். பிட் தனது காதல் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இருந்தபோது அவரது வாழ்க்கையில் நுழைந்தவர் ஜுலி. இவர் நுழைந்ததால் அனிஸ்டன் வெளியேறினார். பிராட் பிட், அனிஸ்டனை முறைப்படி விவாகரத்து செய்துவி்ட்டு ஜுலியுடன் செட்டில் ஆகி விட்டார். ஆனாலும் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி, ஒரு பெண் குழந்தை, இரட்டைக் குழந்தைகள் என்று 3 குழந்தைகளை பெற்றுள்ளனர். இது போக, மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலி மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இப்படி குழந்தைகள் வதவெதன்று அதிகரித்துக் கொண்டு போன நிலையில், இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று பிராடையும், ஜூலியையும் அவர்களது குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த மோதிரத்தை பிராட் பிட்டே டிசைன் செய்துள்ளார். எமரால்ட், வைரம் பதித்த அந்த மோதிரத்தின் விலை ரூ. 1,28,25,725 ஆகும்.

அவர்கள் நிச்சயம் செய்து கொண்டாலும் இன்னும் திருமண தேதி குறிப்பிடவில்லை. ஒரு வழியாக அம்மாவும், அப்பாவும் நிச்சயம் செய்து கொண்டதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் பிட்டுக்கும், ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் வந்துள்ளதாகவும், இருவரும் பிரியப் போவதாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்...
 

Post a Comment