'பாலாஜியை' பாய்பிரண்டுன்னு சொன்னது தப்புதான், தப்புதான்.. காம்னா புலம்பல்!

|


Kamna Jethmalani
திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்று கூறியதற்காக நடிகை காம்னா ஜெத்மலானி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதய திருடன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடி்ததுள்ளார். இருந்தாலும் எதிலும் அவர் எந்த எபக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. அவரது நடிப்பும், கவர்ச்சியும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இருப்பினும் தெலுங்கில் கொஞ்சம் போல பிசியாக உள்ள அவர் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏழுமலையானை தன்னுடைய பாய்பிரண்ட் என்று கூறியிருந்தார். இது பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது. கடவுளை எப்படி பாய்பிரண்ட் என்று கூறலாம் என்று அவருக்கு தொலைபேசி, கடிதம் மூலமாக பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருப்பதி ஏழுமலையான் தான் எனக்கு எல்லாமும். அவர் தான் எனக்கு தந்தை, நண்பர். அந்த அர்தத்தில் தான் பாய்பிரண்ட் என்று கூறினேன். அதற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. பாய்பிரண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியது பிரச்சனையாகிவிட்டது.

ஏழுமலையான் தான் என்னுடைய இஷ்ட தெய்வம். அவரை பாய்பிரண்ட் என்று நான் கூறியது பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். அதற்காக அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 

Post a Comment