கிசு கிசு - சாக்கு போக்கு இயக்கம்.. ஷாக் கொடுத்த ஹீரோயின்..

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

சிவா காட் ஆடும் டான்ஸ் பேர்ல படம் எடுக்கற விஜயமான இயக்கம் ஹாலிவுட் பூமியிலயும், சிவப்பு கொடி நாட்டுலயும் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... முதல்ல ஓ.கே. சொன்ன தயாரிப்பு, திடீர்னு ஹாலிவுட் பூமிக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்களாம். எடுக்கற காட்சிய சிவப்பு கொடி நாட்டுலய எடுத்துருங்க. இன்னொரு கன்ட்ரிக்கு போய் எடுத்தா பட்ஜெட் எகிறிடும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். இதுபத்தி இயக்கத்துகிட்ட கேட்டா ஹாலிவுட் பூமிக்கு போகாததுக்கு காரணம் விசா கெடக்காததுதான்னு சாக்குபோக்கு சொல்றாராம்... சொல்றாராம்...

மாசக்கணக்குல ஸ்டிரைக் நடந்ததை சாதகமா பயன்படுத்திக்கலாம்னு உதவி இயக்கங்க நம்பனாங்களாம்... நம்பனாங்களாம்... ஷூட்டிங் இல்லாம வீட்ல இருக்க ஹீரோக்கள பாத்து சூப்பர் கதை இருக்கு சொல்ல வரட்டுமான்னு பர்மிஷன் கேட்டப்ப எல்லா ஹீரோக்களுமே எஸ்ஸாயிட்டாங்களாம்... சம்மர் லீவுல ஷூட்டிங் வெச்சிடுவாங்க. அதால பேமலியோட இப்பவே பாரின் போறோம். வந்தப்பறம் கேக்கறேன்னு சொல்லிட்டாங்களாம். கால்ஷீட் வாங்கிடலாம்னு குஷியா இருந்த உதவி இயக்கங்க ஏமாற்றத்துல சோர்ந்து போயிட்டாங்களாம்... போயிட்டாங்களாம்...

மர்மமாக இறந்துபோன திவ்யமான பாரதி ஹீரோயினுடைய லைப் ஹிஸ்ட்ரிய படமாக்குற இயக்கம், அதே சாயல்ல இருக்கற ஓல்டு ரம்ப ஹீரோயின ஒப்பந்தம் பண்ண முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி பேசப்போன இயக்கத்துக்கு ஷாக்காம். ஸ்லிம்மா இருந்தவரு இப்ப பெருத்து போயிருக்காராம். இதால வேற ஹீரோயின இயக்கம் தேடுறாராம்... தேடுறாராம்...


 

Post a Comment