இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

|

Rajinikanth Gives Miss Baashha Music Launch
பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
Close
 
 

Post a Comment