கெளதம் மேனன் படத்தி்ல 'புக்' ஆனார் ரிச்சா!

|

Jai Richa Gangopadhyay Sign Gowtham Menon Movie   

தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து வறண்டு போய்க் கிடந்த ரிச்சாவைக் கூப்பிட்டு தனது படத்தில் புக் செய்துள்ளாராம் கெளதம் மேனன்.

ரிச்சா தமிழில் நடித்த முதல் இரு படங்களும் ஊற்றிக் கொண்ட படங்கள் பட்டியலில் வேகமா போய்ச் சேர்ந்ததால் ராசியில்லாத ராணியாக மாறினார் ரிச்சா. ரிச்சாவிடம் எல்லாம் 'ரிச்சாக' இருந்தாலும் அவரது ராசி சென்டிமென்ட் நெகட்டிவாக இருந்ததால் படங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சிம்புவுடன் அவர் நடித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒஸ்தி பெரும் தோல்விப் படமானது. அதேபோல தனுஷுடன் நடித்த படமும் போண்டியாகிப் போனது.

இந்த நிலையில் கெளதம் மேனன் பார்வையில் பட்டு அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் ரிச்சாதான் நாயகியாம். நாயகனாக நடிக்கப் போவது ஜெய்.

இந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரிக்க மட்டுமே செய்கிறார். இயக்கம் பிரேம் சாய். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

ஏற்கனவே நடுநிசி நாய்கள் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார் கெளதம் மேனன். தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment