சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது. அண்ணன், தம்பி குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் கதைதான் என்றாலும் களம் புதிது. முகங்கள் புதிது அதனால் சுவாரஸ்யம் குறையாமல் செல்லும் நாதஸ்வரம் 600 வது எபிசோடை தொட்டுள்ளது.
அண்ணன் சொக்கலிங்கத்திற்கு துரோகம் செய்த தம்பி மயில் தற்போது திருந்தியுள்ளார். அவர் மீண்டும் வந்து அண்ணன் குடும்பத்துடன் இணைவாரா?. மதுரைக்கு தம்பியை தேடிச் செல்லும் சொக்கலிங்கம் அண்ணன் கைகளில் தட்டுப்படுவாரா? ராகினிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையின் சுயரூபத்தை அறிந்து கொள்வார்களா?. மலரின் அப்பா வீட்டில் சொத்து விசயம் என்ன ஆகும். மகா மீது வன்மம் வைத்துள்ள மரக்கடைக்காரார் என்ன ஆவார்? மகாவிற்கு ஏதாவது ஆபத்து நேருமா?
இப்படி 'இயக்குநருக்கேத் தெரியாத' பல சஸ்பென்ஸ்களுடன் போய்க் கொண்டிருக்கும் நாதஸ்வரம் இந்த வாரம் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது.
இதுநாள் வரை மாப்பிள்ளை செல்வரங்கமாக 595 எபிசோட் வரை நடித்த நடிகர் ரவிராகுல் இப்போது ஆளைக் காணோம். வழக்கம் போல இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டார்கள். ஏற்கனவே நாதஸ்வரம் நாடகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் மாறிவிட்டார்கள். இப்போது செல்வரங்கமும் மாறிவிட்டார். அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் வேறு ஆளைப் போட்டுவிட்டதாக நாதஸ்வரம் டீமில் கிசுகிசுத்தார்கள். எது உண்மையோ தெரியவில்லை.
நல்லவேளை, இந்த சீரியலுக்குப் பதில் இந்த சீரியல் என்று ரெட் கார்டு போடாத அளவுக்கு நாதஸ்வரம் பட்டையைக் கிளப்புதே அது போதுமே...!
Post a Comment