பிரபுதேவாவே ஆடுறார்னா... உணர்ச்சிவசப்படும் சோனாக்ஷி!

|

Sonakshi Raised The Bar Match Prabh Deva

மும்பை: பிரபுதேவா நமக்கு டான்ஸ் சொல்லித் தரும்வரை எந்தப் பயமும் இல்லை. ஆனால் அவரே நம்முடன் இறங்கி ஆட வந்து விட்டால் நாம் அம்பேல்தான். கண்டிப்பாக அவருக்கு சமமாக ஆடினால்தான் நாம் பிழைக்க முடியும் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார் பாலிவுட்டின் இளம் புயல் சோனாக்ஷி சின்ஹா.

அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

அந்தப் பாடலுக்கு ஆடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி கூறுகையில், பிரபுதேவா சார் நமக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜாலியாக சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்தால் போதும். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து டான்ஸ் ஆட வந்து விட்டால் நாம் செத்தோம். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவருடன் இணைந்து ஆடுவது என்பதை நினைத்தாலே நடுங்கிப் போய் விடும்.

இருந்தாலும் அவருக்கு இணையாக ஓரளவுக்காவது ஆடினால்தான் நாம் பிழைத்தோம். அவருடன் இணைந்து ஆடும்போது தானாகே நமது டான்ஸும் சிறப்பாக மாறி விடுகிறது என்றார் சோனாக்ஷி.

இந்தப் பாடலுக்காக செமத்தியான மூவ்மென்ட்களை சோனாக்ஷிக்காக வைத்துள்ளாராம் பிரபுதேவா. அதை கஷ்டப்பட்டாலும் கூட சிறப்பாக செய்து அசத்தி விட்டாராம் சோனாவும்.

பட்டையைக் கிளப்பும் மூவ்மென்ட்களை வைப்பதில் பிரபுதேவாவுக்கு நிகர் அவர்தான்...!

 

Post a Comment