லண்டன்: நான் காலையில் எழுந்ததுமே எனது முகத்தைக் கழுவ மாட்டேன். அப்படியே விட்டுவிடுவேன். இதுதான் எனது முகம் இந்த வயதிலும் பொலிவுடன் திகழக் காரணம் என்று ஹாலிவுட் நடிகை சல்மா ஹேயக் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் இன்று வரை ஹாட் நாயகிகள் பட்டியலில் நீடித்து வருவபர் சல்மா. வயது 46 ஆனாலும் இன்னும் ஜொலிக்கிறார். இவரது இளமைக்கும், வயதுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.
இந்த நிலையில் தனது அழகு ரகசியத்தை கிசுகிசுத்துள்ளார் சல்மா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவ மாட்டேன். அப்படியே விட்டு விடுவேன். இதுதான் எனது முகம் பொலிவுடன் பளிச்சென, தோல் சுருக்கமின்றி விளங்க முக்கியக் காரணம்.
மேலும் எனது தோல் பாதுகாப்புக்காக நான் சிறப்பாக எதையும் செய்வதில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன். இதுதான் எனது சருமம் இயல்பான நிலையில் இருக்க இன்னொரு முக்கியக் காரணம்.
என்னைப் போன்ற முதுமையை நெருங்கும் பெண்களுக்கும் சரி, இளம் பெண்களுக்கும் சரி நான் சொல்ல விரும்பும் அட்வைஸ், இயற்கையாக இருங்கள், இயற்கையாகவே உங்களது சருமத்தைப் பாதுகாத்து பராமரித்து வாருங்கள். அதுவே போதுமானது என்று கூறுகிறார் சல்மா.
Post a Comment