மும்பை: போதைப் பழக்கத்துக்கு எதிரான மாநில அரசின் பிரச்சாரத்துக்கு நடிகர் ஆமீர்கானை பிராண்ட் அம்பாசிடர் ஆக்க முடிவு செய்துள்ளது மராட்டிய அரசு.
அரசுத் தரப்பில் தன்னுடன் இதுபற்றி பேசியிருப்பதாகக் கூறியுள்ள ஆமீர்கான், இன்னும் தனது ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை.
ஆனால் சமூக அக்கறை கொண்ட நடிகரான ஆமீர் நிச்சயம் தன் ஒப்புதலைத் தெரிவிப்பார் என்று மாநில சமூக நலத்துறை அமைச்சர் சிவாஜிராவ் மோகே தெரிவித்தார்.
மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படவிருக்கும் போதை ஒழிப்புப் பிரச்சாரம் குறித்த முதல் கூட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி புனேயில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்துக்கு நடிகர்கள், எழுத்தாளர்கள் என அறிவுசார்ந்த பலரும் அழைக்கப்பட உள்ளனர்.
நாடகங்கள், கட்டுரைகள், செய்திகள் மூலம் சரியான முறையில் போதை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுப்போருக்கு உரிய ரொக்கப்பரிசுகள் வழங்கவும் மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
Post a Comment